கொழும்பு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி சாலிய மெத்திவ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நிதி மன்றம் ,மேன்முறையீட்டு நீதி மன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகிய வற்றில் 1975 ம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக கடமையாற்றியுள்ளார்.
இவர் சப்ரகமுவ ஆளுநராக 1995முதல் 2005 ம் ஆண்டு வரை செயற்பட்டுள்ளார்.
அத்துடன் ஊழியர்சேமலாப நிதியத்தின் தலைவராக 2005 ஜூலை மாதம் முதல் அதேஆண்டு நவம்பர் வரை கடமையாற்றியுள்ளார்.
அத்தடன் சம்பளம் மற்றும் ஆளனி ஆணைக்குழுவின் இணைத்தலைவராக 2006 முதல் 2013 ஒக்டோபர் வரை பதவி வகித்த அவர் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தானத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக 1994 நவம்பர் முதல் 1995 பெப்ரவரி வரையும் செயற்பட்டுள்ளார்.
2001,2004 ஆண்டு பொதுத்தேர்தல்களில் அரசியல் பழிவாங்கலில் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டது மட்டுமல்லாமல் 2005 ஜனாதிபதி தேர்தலில் அரசியல் பழிவாங்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஆணைக்குழுவின் தலைவராக சாலிய மெத்திவ் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment