20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ‘கர்பலா அவனியு’ வீதி- மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

karbala road– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்க்கா வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கர்பலா அவனியு வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு 12-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி நூரானிய்யா ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச அமைப்பாளர் கமால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

karbala road

இதன் போது கர்பலா அவனியு வீதி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபிய உயர் கல்வி அமைச்சின் இமாம் சஊத் பின் மஹ்மூத் பல்கலைக்கழகத்தின் வேந்தர் போராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல் ஸூலைமி,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோரினால் நாடா வெட்டி மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

karbala road (2)

இங்கு கர்பலா அவனியு வீதியின் நினைவுக் கல்லும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான முபீன்,பரீட் ,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட ஊர் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

karbalaroad

karbalaroad (2)

Published by

Leave a comment