வசதி குறைந்த 300 தமிழ்-முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கி வைப்பு

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 300 தமிழ்-முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு 12-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர் பி.ரி.எம்.பாரூக் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது 300 வறிய தமிழ்-முஸ்லிம் குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,சவூதி அரேபிய உயர் கல்வி அமைச்சின் இமாம் சஊத் பின் மஹ்மூத் பல்கலைக்கழகத்தின் வேந்தர் போராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல் ஸூலைமி,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

hizbullah

இந்நிகழ்வில் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட நகர சபை உறுப்பினர் சியாட், சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர் கரீம் ஜேபி உட்பட முக்கியஸ்தர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு 300 தமிழ்-முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

Published by

Leave a comment