புதிய காத்தான்குடி பதுறியா சதுக்கத்திற்கான அடிக்கல் நட்டி வைப்பு

baduriya (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2014 -விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி பதுறியா சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 12-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை புதிய காத்தான்குடி பதுறியா பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி தலைமையில் இடம்பெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

baduriya (2)

இதன் போது புதிய காத்தான்குடி பதுறியா சதுக்கத்திற்கான அடிக்கல் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,சவூதி அரேபிய உயர் கல்வி அமைச்சின் இமாம் சஊத் பின் மஹ்மூத் பல்கலைக்கழகத்தின் வேந்தர் போராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல் ஸூலைமி,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட நகர சபை உறுப்பினர்களான அலி சப்ரி, சியாட் உட்பட அப் பிரதேச முக்கியஸ்தர்கள் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக நடப்பட்டது.

hizbullah

புதிய காத்தான்குடி பதுறியா சதுக்கத்தின் முதற்கட்ட வேலைத்திட்டத்திற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

baduriya

Published by

Leave a comment