தோப்பூர் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தது NFGG

PMGG-Logo[1]PMGG ஊடகப்பிரிவு

தோப்பூர்: யுத்த காலத்தில் வீடுகளை இழந்து, நீண்ட காலமாக நஷ்டஈடுகள் எதனையும் பெற்றுக்கொள்ளாது துன்பப்பட்டிருந்த தோப்பூர் பிரதேசமக்களுக்கு NFGG இடைக்கால நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச மக்கள் NFGGயின் தலைமைத்துவ சபைக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
தோப்பூர் பிரதேசத்தில் 10 வீட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 16 வீடுகளும், சூழவுள்ள காணிகளும் கடந்த 2005 ஆண்டு முதல் பாதுகாப்புப் படையினரால் கையேற்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன.

இவ்வாறு வீடுகளை இழந்த மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கான வாடகைக்கான கொடுப்பனவுகளோ அல்லது வேறு ஏதும் நஷ்டஈடுகளோ வழங்கப்பட்டிருக்கவில்லை. அன்றாடம் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்கின்ற ஏழை மக்களே இவ்வாறு வீடுகளை இழந்தவர்களாவார்கள்.

குடியிருப்பதற்கு மாற்றிடம் இல்லாமலும், நஷ்டஈடுகள் எதுவும் கிடைக்காமலும் கடந்த 9 வருடங்களாக பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்த இந்த மக்கள் இத்தனை காலமும் பல்வேறு அரசியல்வாதிகளிடமும் தமது பிரச்சினைகளை முன்வைத்து ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுத் தருமாறு மன்றாடி வந்தனர். இருப்பினும், எந்தத் தீர்வும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் இம்மக்கள் தமது பிரச்சினைகளை Nகுபுபுயின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

தம்மால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு இதற்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக NFGG இம்மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது.

அன்று முதல் NFGGயினால் மேற்கொள்ளப்பட்ட அயராத தொடர்முயற்சிகள் காரணமாகவும், இறைவனின் உதவியினாலும் கடந்த 09.08.2014 அன்று வீடுகளை இழந்தோருக்கான கடந்த இரண்டு வருடத்திற்கான வாடகைப் பணம் மொத்தமாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பல்வேறு அரசியல்வாதிகளிடம் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் கூட, எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் NFGG ஒரு இடைக்கால நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்திருப்பதானது தோப்பூர் மக்கள் மத்தியில் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் தமது மனமார்ந்த நன்றிகளை NFGGயின் தலைமைத்துவ சபைக்கு தோப்பூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்விடயத்தில் இது ஒரு முதற்கட்டத் தீர்வேயாகும். இம்மக்களுக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை NFGG தொடந்தும் மேற்கொள்ளும்.

இவ்விடத்தில் வீடுகளை இழந்த மக்களின் பிரச்சினைகளை மனிதபிமான நோக்கில் கருத்திற்கொண்டு இம்மக்களுக்கான முதற்கட்ட நிவாரணம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதில் பங்களிப்புச் செய்த இராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் NFGG நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Published by

Leave a comment