கணிதத்தின் உயரிய விருதை முதல் முறையாக வென்ற ஈரானிய பெண்!

iranநியுயோர்க்: கணிதத்தின் நோபல் விருது என்று வர்ணிக்கப்படும் பீல்ட்ஸ் பதக்கத்தை முதல் முறையாக பெண் ஒருவர் வென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் ஈரான் நாட்டு கணிதவியலாள ரானா மரியம் மிர்சக்கானி என்பவரே அதனை வென்றுள்ளார்.

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற சர்வதேச கணிதவியலாளர்களின் மாநாட்டில் வைத்து வழங்கப்பட்ட நான்கு பீல்ட்ஸ் பதக் கங்களில் ஒன்றையே கலி போர்னியாவின் ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக விரிவுரையாளரான மிர்சக்கானி வென்றார்.

1936 ஆம் ஆண் டில் இருந்து நான்கு ஆண்டு களுக்கு ஒருமுறை வழங்கப் படும் விருதை வென்ற 56 பேரில் முதல் பெண் இவரா வார். ‘இது எனக்கு கிடைத்த பாரிய கௌரவமாகும்.

இது இளம் பெண் விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர் களை ஊக்குவிப்பதாக இருந் தால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்’ என்று மிர்சக் கானி குறிப்பிட்டார். மிர்சக் கானி கணிதத்துறையில் பல ஆய்வுகளையும் மேற்கொண் டவராவார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 1977 ஆம் ஆண்டு பிறந்த மிர்சக்கானி ஹார்வார்ட் பல்கலைக்கழ கத்தில் கலாநிதி பட்டம் பெற்றவராவார்.

Published by

Leave a comment