‘இஸிஸ் அமைப்பால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை’-இந்தியா

29-india-gate3-300[1]– AF-90

டெல்லி: இஸிஸ் அமைப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய நகரங்களில் இஸிஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எந்த உளவு எச்சரிக்கையும் நமக்கு இதுவரை இல்லை.

ஈராக்கிய அரசுப் படையினரை எதிர்த்துத்தான் தற்போது இஸிஸ் மோதி வருகின்றனர். இவர்களால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

நாட்டில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும், அவர்களின் சதிச் செயல்கள் குறித்தும் உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

உளவுத்துறை அளிக்கும் தகவல்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Published by

Leave a comment