காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 6 மில்லியன் ரூபாய் செலவில் காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு 12-08-2014 இன்று செவ்வாய்க்கிழமை ஹிழுறிய்யா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எஸ்.அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது புதிய மூன்று மாடி வகுப்றைக் கட்டிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இங்கு புதிய மூன்று மாடிக் கட்டிடத்தின் நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட ஹிழுறிய்யா வித்தியாலய ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கல்வியலாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment