‘முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதனை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கொக்கரிக்கின்றார்கள்’

ilmi ilmyகாத்தான்குடி: ‘முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதனை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கொக்கரிக்கின்றார்கள்’ இவ்வாறு மு.காவின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார். ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்படுவதற்கான முதல் வித்து விதைக்கப்பட்டுள்ளது. இது இத்தேர்தலின் பின்னர் விடியும் நாளில் முழுநாட்டுக்கும் பறைசாட்டும்.

முஸ்லிம் தலைமைகள் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒற்றுமைப்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கு விடியலைப் பெற்றுத்தரவேண்டும் என்று அண்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கான நெருக்கு வாரங்களின் போது பட்டிதொட்டி எங்கும் ஒருமித்த குரலாக பேசப்பட்டது.

இன்று ஊவா மாகாணத்தில் விதைக்கப்பட்டிருக்கும் ஒற்றுமைவித்து எதிர்காலத்தில் இதனை வெண்றெடுக்கும் என்ற அவாவோடும் பிரார்தனையோடும் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரிவில் தங்களது அரசியல் காய்களை நகர்த்தி குளிர்காய்கின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில மாகாணசபை உறுப்பினர்களும் கொக்கரிக்கின்றார்கள்.

ilmi ilmy
இல்மி அஹமட் லெவ்வை          காத்தான்குடி இளைஞர் மு.கா. காங்கிரஸ் அமைப்பாளர்

முஸ்லிம்களின் பிரிவே இவர்களின் சிம்மாசணங்களை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரே வழி என நினைத்து செயல்படுகின்றார்கள். இவ்வாறான மாயவலைகளில் முஸ்லிம் சமூகம் இனியும் சிக்கிக் கொள்ள முடியாது.

நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு நல்லதொரு சமிக்கை ஊவாவிலே உதயமாகி இருக்கிறது.

எனவே, கானல்களுக்கு செவிசாய்க்காமல் முஸ்லிம்களின் அரசியல் தந்தை மர்ஹூம் அஸ்றப் அவர்களின் அரசியல் பிரசவத்தில் பிறந்த அத்தனை தலைமைகளும் வேறுபாடுகளை மறந்து ஏதோ ஒரு நிகழ்சி நிரலை தளமாக கொண்டு ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்த உழைக்க முன்வரவேண்டும். இது முஸ்லிம் தலைமைகளின் பிழவுகளில் அரசியல் இலாபம் தேட முற்படும் பிற்போக்கு சிந்தனையாளர்களுக்கு நல்லதொரு பாடத்தையும் புகட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment