‘செல்ஃபி’ எடுக்கச் சென்று கடலில் விழுந்து பலியான தம்பதியினர்!

selfie– SHM

லிஸ்பன்: செல்போனின் ‘செல்ஃபி’ எடுக்கச் செல்லும்வேளையில், போலந்து நாட்டு தம்பதி, மலை உச்சியில் இருந்து கால்தவறி கடலில் விழுந்து இறந்த சம்பவம் பிரபல சுற்றுலா தலமான போலந்து நாட்டின் லிஸ்பன் அருகே நடந்துள்ளது.

செல்ஃபி போட்டோ எடுத்துக்கொள்வது இப்போது ஃபெஷனாகிவிட்டது. எங்கு நோக்கினும் செல்ஃபி மயம்தான். இதே மயக்கத்தில்தான் போலந்து நாட்டு தம்பதி மலை உச்சியில் இருந்து கடலில் விழுந்து இறந்துள்ளனர்.

போலந்து நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலமான லிஸ்பன் அருகேயுள்ளது கபோ டே ரோகா. இங்கு மலை குன்றை ஒட்டி, அட்லான்டிக் கடல் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுடன் போலந்து தம்பதி ஒன்று வந்துள்ளது.

குழந்தைகளை ஓரமாக நிற்க செய்துவிட்டு மலை குன்றின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர் அந்த தம்பதி. பின்பக்கம் இருந்த கடலும் சேர்ந்து படத்தில் விழ வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சிபகுதிக்கே வந்த கணவனும், மனைவியும், குழந்தைகள் கண் எதிரிலேயே கடலில் விழுந்து பலியாகியுள்ளனர்.

 

Published by

Leave a comment