‘இஸ்லாமிய கிலாஃபத்’ போராளிகளுக்கு எதிராக ஒன்றிணையும் சவுதியும் எகிப்தும்…

saudi egypt– AF-90

ரியாத்: ஈராக்கில் தற்போதைய அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இஸ்லாமியப் போராளிகளின் (இஸிஸ்) தாக்குதல்களை எதிர் கொள்ள எகிப்தும், சவுதி அரேபியாவும் ஒரு கூட்டு முயற்சியை ஆரம்பித்துள்ளது.

எகிப்தின் தற்போதய ஜனாதிபதி அப்தெல் பட்டா அல் சிசியும், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திற்கு எதிரானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

தற்போதய ஈராக்கின் நிலைமை குறித்து ஆய்வு செய்த அவர்களின் சந்திப்பு அரபு முஸ்லிம் நாடுகளிடையே தற்போது காணப்படும் சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுவதாக சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சரான இளவரசர் சவுத் அல் பைசல் தெரிவித்தார்.

saudi egypt
எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா அல் சிசியும், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவும்

வெளிநாட்டு, உள்நாட்டு போர்கள், துரோகம் மற்றும் சர்ச்சைகள் தலையீடு போன்றவை அதிகரித்துக் காணப்படும் இந்த நேரத்தில் பகைமையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த கூட்டு முயற்சி இஸ்ரேலுக்கு எதிராக இடம்பெற்றிருந்தால் எவ்வளவோ நன்மைகளை பலஸ்தீன் மக்கள் அடைந்திருப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் வால்களான இத்தகைய தலைவர்களின் செயற்பாடுகள் எத்தகைய மாற்றங்களை ஈராக்கில் ஏற்படுத்தப்போகின்றன என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

Published by

Leave a comment