9 வயது சிறுமியை இஸிஸ் போராளி மணந்தாரா? நடந்தது என்ன?

isis (2)– AF- 90

தியுனிஸ்: கடந்த சில தினங்களுக்கு முன்பு தியுனிசியாவைச் சேர்ந்த இஸிஸ் போராளி ஒருவர் 9 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும், அச்சிறுமி சிறுமி அழுதபடியே அந்த நபருடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் அந்த நபர் அவ்வாறு சிறுமியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது தற்போது தெளிவாகி இருக்கிறது.
குர்ஆனில் உள்ள சூராக்களை மனப்பாடமாக கூறும் போட்டியில் கலந்து கொண்ட சிறுமி ஒரு சூராவை தவறாக கூறியதால் அழுதுள்ளார். அவரை போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான அந்த வாலிபர் சமாதானம் செய்ததை பார்த்து அவர்களுக்கு திருமணமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்த வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. அரபு மொழியில் உள்ள வீடியோவின் தலைப்பில் தியுனிசியாவைச் சேர்ந்த போராளி 9 வயது சிறுமியை திருமணம் செய்ய விரும்புகிறார். அதனால் சிறுமி அழுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

isis

போராளி 9 வயது சிறுமியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறப்பட்ட வீடியோவை பார்த்தேன். நான் துனிசியாவைச் சேர்ந்தவன் என்றாலும், முஸ்லீம் என்றாலும் அநியாயம் செய்யும் போராளிகளை அவமதிக்க தயங்காதவன். தங்களை போராளிகள் என்று கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளை ஐரோப்பியர்கள் மட்டும் இன்றி முஸ்லீம்களும் வெறுக்கிறார்கள்.

ஆனால் இங்கு நடந்த சம்பவம் திரிபுபடுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செயல்களை முஸ்லிம்களின் எதிரிகள் மாத்திரமன்றி, சில முஸ்லிம்களும் செய்துவருகின்றனர்.

isis (2)

நியாயத்தை நியாயமாகவும், அநியாயத்தை அநியாயம் எனவும் உண்மையைச் சுட்டிக்காட்டவேண்டுமே தவிர, போலிச் செய்திகளை பரப்பக்கூடாது எனவும் இவ்வீடியோவைப் பார்த்தபலர் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment