மனிதர்களின் நேரத்தை திருடும் நவீன தொடர்பாடல்கள்….

mother family– AF-90

லண்டன்: மனிதர்களின் நேரத்தை கம்யூட்டர், தொலைக்காட்சி, மொபைல் போன்கள் போன்ற இயந்திரங்கள் திருடிக்கொள்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதற்கும், மொபைல் போனிலும்தான் செலவிடுகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்தின் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இவ்விபரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.

இங்கிலாந்து மக்கள் பொதுவாக அதிக நேரத்தை தொலைக்காட்சி, மொபைல், டேப்லட் ஆகியவற்றில் கழிக்கின்றனர்.

61 சதவீத மக்கள் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகின்றனர். மேலும் டேப்லட், கம்ப்யூட்டர் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. சாதாரணமாக, ஒரு இங்கிலாந்து சிறுவன் இது போன்ற நடவடிக்கைகளில் 11 மணி நேரம் 7 நிமிடத்தை கழிக்கிறான்.

mobile (2)

கடந்த 2010ல் ஆய்வு செய்த போது இது 8 மணிநேரம் 48 நிமிடங்களாக இருந்தது. தற்போது இது அதிகரித்துள்ளது.

நவீன தொழில்நுட்ப யுகம் மக்களுக்கு பல்வேறு வசதிகளை கொண்டு வந்து சேர்த்த போதிலும் மக்களின் தனிப்பட்ட நேரத்தை அதிகமாக அது திருடிக் கொண்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.

வேலை நேரத்திற்கு பிறகும் தங்களது வேலை தொடர்பான நடவடிக்கைகளில் 60 சதவீதம் பேர் ஈடுபடுகின்றனர். 10 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடியே மொபைலில் படிப்பது, வேலை தொடர்பான மெயில்களை பார்வையிடுவது, அனுப்புவது என ஈடுபடுகின்றனர்.

mother family

இதனால் ஒருவர் சுமார் 8 மணிநேரம் 41 நிமிடம் தூங்குகிறார் என்றால், அதை விட அதிகமாக 11 மணிநேரத்திற்கும் மேலாக டிவி, மொபைல் கம்ப்யூட்டர் இவற்றோடு செலவிடுகின்றனர்.

போக்குவரத்திலும், பஸ் நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களிலும்…ஏன் உணவகங்களிலும்கூட மக்கள் போனிலும், டேப் இலும் இருப்பதையும் அங்கு காணமுடிகிறது.

mobile

இவ்வாறான நவீன தொடர்பாடல் சாதனங்களால் பெற்றோர் பிள்ளைகளிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும், கனவன்-மனைவி அன்புப் பரிமாற்றங்கள் மற்றும் அருகில் இருக்கும் நண்பனிடமும் மனம் திறந்து பலகி பேசமுடியாமல் மனிதர்களின் உறவு நெருக்கங்களை வேறுபடுத்துவதையும் இன்று உலக ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment