டுபாய்: இலங்கையில் இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் வீசிய ஒரு சில பந்துகளில் தங்களுக்கு சந்தேகமிருப்பதாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அறிவித்திருக்கிறது.
காலியில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது அஜ்மல் வீசிய ஒரு சில பந்து வீச்சுக்கள், சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் விதிமுறைக்கு எதிராக அமைந்தாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. அதாவது கை சுழற்சி 15 டிகிரி இற்கும் கூடுதலாக காணப்பட்டதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2009 இல் டுபாயில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரின்போது சயீட் அஜ்மல் இவ்வாறான சர்ச்சைக்கு உள்ளாகி இருந்ததுடன், பரிசோதனைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி இருந்தார். இந்நிலையில் அஜ்மல் மீண்டும் பந்து வீச்சுப் பரிசோதனைக்கு உட்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு சயீட் அஜ்மல் பரிசோதணைக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்டால், பாகிஸ்தான் அணிக்கு ஈடு செய்யமுடியாத பாரிய இழப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
Published by


Leave a comment