ஏறாவூரில் போதைபொருளை ஒழிக்க சம்மேளனமும், உலமாசபையும் முடிவு

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இளைஞர்கள் பலர் போதைபொருள் விற்பனையாளர்களாகவும், பாவனையாளர்களாகவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர்,

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து, எனதூரில் இவ்வாறான போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும், இவர்களிடமிருந்து எனதூர் இளைஞர்களையும் இமாணவர்களையும் காப்பாற்றிக்கொள்ள பல்வேறு வகையான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

eravur

இதன் நிமிர்த்தம் ஏறாவுரின் மிக முக்கிய இரு நிருவனங்களான சம்மேளனமும், உலமா சபையும் ஒன்றிணைந்து போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியை கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மூலம் நேற்றிரவு பொலிஸ் நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

eravur

உடனடியாக இது விடயமான விழிப்புனர்வுகளை பொதுமக்களுக்கு சென்றடையும் வண்ணம் செயற்பட இரு பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்தனர்.

Published by

Leave a comment