ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சென்ற வாரமும்இஇன்றும் குடுஇகஞ்சா போன்ற போதைபொருட்களுடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி விக்ரமநாயக்க அவர்களை நேரடியாக சந்தித்த கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் நன்றி தெரிவித்ததோடு, ஏறாவுரின் அனைத்து போதைப் பொருள் பாவனைகளையும் நிறுத்துவதற்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்யத் தயார் என்றும் தெரிவித்தார்.
உங்களின் இவ்வாறான நடவடிக்கைகளினால் எனதூர் மாணவர்களையும், இளைஞர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்ததோடு, இது சம்மந்தமாக ஏறாவூரில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபையினரையும், பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தையும் உடனடியாக தங்களை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Published by

Leave a comment