கொழும்பு: ஜனாதிபதி அழைத்தால் அரசியலில் ஈடுபடுவேன். இல்லையென்றால் நாட்டுக்காக தொடர்ந்தும் ஏனைய வழிகளில் சேவையாற்றுவேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்தால் அரசியலில் ஈடுபடுவேன் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்ததன் பின்னரே எங்கு எவ்வாறு போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க முடியும். ஜனாதிபதியின் சகோதரர் என்ற போதிலும் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிழையாக பயன்படுத்த மாட்டேன்.
மக்களின் நலன்களை உறுதி செய்வதே எனது நோக்கம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் அவர் பாராளுமன்றம் செல்ல வரவேண்டும் என்றே விருப்பம் தெரிவித்திருக்கின்றன. அப்போதுதான் அவர்விடும் பிழைகளையும், அரசியல் துஷ்பிரயோகங்களையும் பாராளுமன்றத்தில் தட்டிக்கேட்க வாய்ப்பு ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a comment