காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்

DSC06506– பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் மனிதாபிமான மற்றும் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு

காத்தான்குடியிலுள்ள இரண்;டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 24வது ஆண்டு சுஹதாக்களின் ஞாபகார்த்த நினைவாக 3வது மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம் 10-08-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-01 ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.

இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் மனித நேயம் பேணும் 3வது இரத்ததான முகாமில் ஐ.வை.எப். இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக் ,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு இரத்த தானத்தின் முக்கியத்துவம் தொடர்பான விஷேட உரையை இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தஃவாப் பிரிவு பொறுப்பாளர் மௌலவி முஸ்தகீம் (பலாஹி) மற்றும் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேக் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

இதில் இரத்த தானம் வழங்குவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேக் பரிசோதித்தார்.

This slideshow requires JavaScript.

இதன் போது 100க்குப் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இவ் இரத்தான முகாமில் இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜவ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள் ,உலமாக்கள்,இளைஞர் யுவதிகள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் ,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக,கல்வி,தஃவா ஆகிய பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment