லண்டன்: நேற்று நிறைவடைந்த 72 மணித்தியால இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னர், இன்று அதிகாலையிலிருந்து இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாக லண்டனில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டமொன்று இரண்டாவது தடவையாக இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து, காஸா மக்களுக்காகக் குரல் கொடுத்ததுடன், இஸ்ரேலைக் கண்டித்தும் இப்பேரணி இடம்பெற்றது.
இப்பேரணி லண்டனில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று, பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இவ்வாறிருக்க, பிரித்தானிய அரசாங்கம் 24 மணித்தியாலங்களுக்குள் 4.5 மில்லியன் பவுண்ஸ்களை காஸா மக்களுக்காக அவசரமாகக் கோரி இருக்கின்றது. பிரித்தானிய அரசாங்கம், தொண்டார்வ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நன்கொடைகள் மூலமாக இப்பணம் திரட்டப்படுகிறது.
இன்றைய பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலை, அமெரிக்க ஆதரவு நாடுகள் பகைத்துக்கொள்ளா விட்டாலும், காஸா மக்களின் நலனுக்கு இன்றியமையாத ஓர் தருணமாக அமையும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Published by



Leave a comment