ஈராக்கின் ‘இஸ்லாமிய கலீஃபத்’ மீது அமெரிக்காவின் திடீர் திருப்பம் ஏன்?

iraq-ISIS-jihad_2940452b[1]– AF-90

பக்தாத்: ஈராக்கில் இஸிஸ் போராளிகள் மீது திடீரென அமெரிக்கா விமான தாக்குதல் நடத்த முடிவெடுக்கப்பட்டதும், அதன் பின்னணி தகவல்களும் வெளியாகியுள்ளன. ஈராக்கில் இஸிஸ் போராளிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது அமைதி காத்த நாடு அமெரிக்கா. ஆனால் இன்றோ நிலைமை மாறியுள்ளது.

இஸிஸ் போராளிகளை இலக்கு வைத்து அமெரிக்க போர் விமானங்கள் அதிரடி தாக்குதலை தொடுத்துள்ளன.

ஈராக் அரசு கேட்டுக்கொண்டபோதுகூட அமெரிக்கா இஸிஸிக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று கைவிரித்துவிட்டது. தனது நாட்டு படைகளையும் திரும்ப பெற்றுக்கொண்டது அப்போது.

அரசியல் ரீதியாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று ஈராக் அரசு தரப்பு மற்றும் இஸிஸ் தரப்புக்கும் செய்தியை தெரிவித்தது அமெரிக்கா. ஆனால் இப்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில், இஸிஸால், கிறிஸ்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுவது ஒபாமாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பல்லாயிரக்கனக்கான ஷியாக்களகளை இஸிஸ் கொலை செய்யும்போது, தனக்கு எதிரானவர்களை விரட்டும்போது வாய்மூடி இருந்த அமெரிக்கா, ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தை முதன்முறையாக ஒபாமாவின் வாயில் இருந்து வந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இஸிஸ் போராளிகளிடம் எர்பில் நகரம் வீழ்ந்ததை கேள்விப்பட்டதும், நிலைமை மோசமடைவதை ஒபாமா உணர்ந்துள்ளார். ஏற்கனவே முக்கியமான அணைக்கட்டை இஸிஸ் கைப்பற்றியதும், ஈராக் படைகள் பின்வாங்கி வரும் தகவல்களும் அவர் காதுக்கு எட்டியிருந்தது.

இதையடுத்து அவசர ஆலோசனை கூட்டத்துக்கு ஒபாமா ஏற்பாடு செய்தார். இதில் ராணுவம், வெளியுறவு என முக்கியமான துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதே நேரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெர்ரி மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹேகல் ஆகியோரை உடனடியாக வீடியோகான்பரன்சில் வருமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அனைவருடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஒபாமா. அப்போதுதான் இஸிஸ் கொடுமைக்கு உள்ளாகி மலைப்பகுதிகளில் மறைந்து வாழும் யாசிதிஸ் இன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வான்வெளி தாக்குதலை நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில்தான் இஸிஸ் இனப்படுகொலை செய்கிறார்கள் என்ற வார்த்தையை ஒபாமா பயன்படுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அமெரிக்க தரைப்படையை ஈராக்கிற்கு மீண்டும் அனுப்புவதில்லை என்பதில் ஒபாமா உறுதியாக இருந்தார். ஒருவேளை அமெரிக்கர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் மட்டுமே அவர்களை மீட்க அமெரிக்க தரைப்படை அனுப்பப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார். உடனடியாக பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு தனது செய்தியை தெரிவித்தார் ஒபாமா.

தெளிவாகவே தெரிகிறது ஈராக்கில் ஓர் ‘விளையாட்டு’ இடம்பெறுகிறது என்று மட்டும்.

Published by

Leave a comment