பலஸ்தீன் காஸா படு கொலைகளைக் கண்டித்து சமாதானத்தை நோக்கிய மாபெரும் கண்டன அமைதிப் பேரணி

unnamed11எம்.ரீ.எம்.பாரிஸ்

கல்குடா: பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் இஸ்ரேலினால் மேற் கொள்ளப்பட்டு வரும் மனித நேய மற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு  தெரிவித்து மாபெரும் அமைதி கவணயீர்ப்பு பேரணி ஒன்றை கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபையும்,கல்குடா மஜ்லிஸிஸ் ஷூரா ஆகிய அமைப்புக்கள் ஒன்றினைத்து  நடாத்தியது.
இப் பேரணியில் மட்டக்களப்பு அல்-கிம்மா நிறுவனத்தின்  இளைஞர் அணியினரும் கலந்து கொண்டதுடன் கருப்பு நிற பட்டிகளை தலைகளில் அணித்தும் கருப்பு நிற கொடிகளை கைகளில் ஏத்தியும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை 08.08.2014 ஜூம்ஆ தொழுகையினை தொடர்த்து கல்குடா முஸ்லிம் பிரதேச பள்ளி வாயல்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் ஒன்றினைத்து நடாத்திய  சமாதானத்தை நோக்கிய இப் பேரணியில் காஸா படு கொலைகளைக் கண்டித்து நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கும்,சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிற்கு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு,வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளர்கள் ஊடாக மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment