பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்களுக்கு,
அஸ்ஸலாமுஅலைக்கும்
கொழும்பு: கடந்த 01.08.2014 அன்று ஜூம்ஆவின் பின்னர் காத்தான்குடியில் நீங்கள் தலைமை தாங்கி நடாத்திய இஸ்ரேல் எதிர்ப்பு கண்டனப் பேரணி தொடர்பில் உங்களுக்கு நினைவூட்டவேண்டிய சிலவிடயங்களை சுட்டிக்காட்டு வதற்காக இதனை எழுதுகின்றேன்.
காஸாமக்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகளினால் நடாத்தப்படும் வெறியாட்டம் முழுமுஸ்லிம் சமூகத்தினையும் துயரத்திற்குள்ளாக்கியிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே..!
சர்வதேச முஸ்லிம்களின் ஈமானிய உணர்வின் ஒரு அங்கமாக இருக்கின்ற பலஸ்தீன் தொடர்பான முஸ்லீம்களின் அக்கறையும் ஆர்வமும் கடந்தபல வாரங்களாக காஸாமீது நடாத்தப்படும் மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாக மேலும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான உணர்வுகளையும், கண்டனங்களையும் முஸ்லிம்கள் மாத்திரமின்றி மனிதநேயத்தை விரும்பும் அத்தனைபேருமே உரக்கவெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான் உங்களின் கண்டனப் பேரணியும் நடந்திருக்கிறது.
ஒருமுஸ்லிம் என்றவகையில் காஸாமக்களுக்கு ஆதரவாக குரல்–கொடுக்கவேண்டிய கடமையும் ,உரிமையும் உங்களுக்கும் இருக்கிறது.
இருப்பினும், பலஸ்தீன் விடயத்தில் சர்வதேச சமூகமும் அரபுநாடுகளும் கடைப்பிடிக்கும் கொள்கை நிலைப்பாடுகளையும் இஉங்களைப்போன்றவர்கள் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் நடந்துகொள்கின்ற முறையினையும் ஒப்பிட்டுச் சிலவிடயங்களைச் சுட்டிக்காட்டுவது இங்கு தவிர்க்க முடியாததாக மாறுகிறது.
அதாவது, சர்வதேச சமூகமும் அரபுஉலகமும் கைக்கொள்ளும் நயவஞ்சகத்தனமான அநீதியான இரட்டை நிலைப்பாடுகளே பலஸ்தீன மக்களுக்கான நீதி இதுவரை தாமதிப்பதற்கான மிகஅடிப்படைக்காரணமாகும். அது போலவே, இந்நாட்டு முஸ்லிம்கள் விடயத்திலும் எதுவித தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு காரணம் உங்களைப் போன்றவர்களின் இரட்டை நிலைப்பாடுகளும் நயவஞ்சகத்தனமான நடவடிக்கைகளுமே……..
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையிலும் அரசாங்கத்தில் முக்கியபங்குவகிக்கும் பிரதியமைச்சர் என்றவகையிலும் உங்களின் பொறுப்பும் கடமையும் சாதாரணமக்களுடையதைப் போன்றதன்று. முதலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பான கடமையும் பொறுப்பும் பிரதானமானது. அவற்றை நிறைவேற்றுவதில் நீங்கள் எவ்வளவுதூரம் பொறுப்புடனும் மக்களுக்கு விசுவாசமாகவும் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற உங்களின் கடந்த கால வரலாற்றை . நோக்கும்போது உங்களின் கண்டனப் பேரணி நடவடிக்கையானது நயவஞ்சக அரசியல் வேடம் கொண்ட ஒன்றாகவே தெரிகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்குமேலாக இந்நாட்டில் திட்டமிட்ட வகையில் முஸ்லீம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத பிரச்சாரங்களும் அச்சுறுத்தல்களும் கூடிக்கொண்டே வந்திருக்கின்றன.
முதலில் சிறுசிறு இனவாத பிரச்சாரங்களாக தொடங்கிய இவைபின்னர்பகிரங்க பொதுக்கூட்டங்களாகவும் பேரணிகளாவும் மாறின முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இப்பேரணிகளில் பகிரங்கமாகவே தூண்டப்பட்டன.
தெற்கில் சிதறிவாழும் முஸ்லிம்களும் தனிநபர்களும் இலக்கு வைக்கப்பட்டனர். முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்கள் அச்சுறுத்தப்பட்டன. பின்னர் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களுக்கெதிராக தாக்குதல்களும் பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கின.
இதற்கு சமாந்தரமாக முஸ்லிம்களின் பொருளாதார நலன்களும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இவ்வாறு நூற்றுக்கு அதிகமான சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்ட போதிலும்கூட இவற்றுள் எதனையும் கட்டுப்படுத்துவற்கோ தடுத்துநிறுத்துவதற்கோ இந்தஅரசாங்கம் அக்கறைகாட்டவில்லை.
சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இந்த இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் அவற்றுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் போதிய சட்டஏற்பாடுகள் இந்நாட்டில் இருந்தபோதும்கூட அவைஎல்லாமே அரச ஆசீர்வாதத்துடன் புறந்தள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள்மீதும் வர்த்தகநிலையங்கள்மீதும் பகிரங்கமாக தாக்குதல் நடாத்தியவர்கள்மீதுகூட எவ்வித சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இன்று அவர்கள் சுதந்திரமாக உலாவருகின்றனர்.
ஒருபாராளுமன்ற உறுப்பினர் என்றவகையிலும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் என்றவகையிலும் முஸ்லீம்களுக்கெதிரான இந்த இனவாத அச்சுறுத்தல்களைத்தடுப்பதற்கோ அல்லது தணிப்பதற்கோ உருப்படியாக எதனையும் செய்வதற்கு உங்களால் முடியவில்லை.
பொதுமக்களின் ஆத்திரத்தை தணிக்கும்வகையில் அவ்வப்போது சிலஅறிக்கைகளைமாத்திரம் விட்டுவிட்டு நீங்கள் அடங்கிப்போனீர்கள்.
அந்த அறிக்கைகளிலும்கூட அரசாங்கத்தினை சீண்டிவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தீர்கள். மக்களுக்காக பேசவேண்டிய பாராளுமன்றத்தில் உங்களால் குரல்கொடுக்க முடியவில்லை.
அரசிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடியவகையில் தேசிய ஊடகங்களையும் சர்வதேச சமூகத்தையும் உங்களால் கையாள முடியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக தம்புள்ள பள்ளிவாயல் விடயத்தில் நீங்கள் மேற்கொண்ட நயவஞ்சகத் தனமான நடவடிக்கை முழுமுஸ்லிம் சமூகத்தினையும் கடும் வேதனைக்குள்ளாக்கியது.
தம்புள்ளை பள்ளிவாயல் மீதுமேற் கொள்ளப்பட்ட தாக்குதலினை முழுநாடுமே தெலைக்காட்சி மூலமாகக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நேரம். ஜும்ஆதொழுகைக்காகத் திரண்டிருந்த மக்கள் உயிரைக்கையில்பிடித்துக்கொண்டு தொழுகையைக்கூட நிறைவேற்ற முடியாதவர்களாக தப்பியோடவேண்டிய நிலை அங்கிருந்தது.
பள்ளிவாசலுக்கு வெளிப்புறமாக மட்டுமன்றி பள்ளிவாசலுக்கு உட்புறத்திலும் நுழைந்த இனவாதிகள் முஸ்லிம்களால் புனிதமாகக்கருதப்படும் அனைத்தையும் சேதப்படுத்தி இருந்தனர்.இந்தசூழலில்தான் இந்தவன்முறைகளுக்குத் தலைமை தாங்கிய தம்புள்ளை விகாராதிபதியைச் சந்தித்தநீங்கள்’ பள்ளிவாசலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஒருதகரத்திற்குக்கூட பாதிப்புஇல்லை’ என்று கூறியது மாத்திரமல்லாது ‘அனைத்தும் பொய்ப்பிரச்சாரமாகும்’ என சிங்கள ஊடகங்களுக்கு முன்னால் தெரிவித்தீர்கள். அதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான படுமோசமானதுரோகத்தனமானகாட்டிக்கொடுப்பைச்செய்தீர்கள்.அதற்காகமுஸ்லிம்சமூகத்திடம்நீங்கள்இதுவரைமன்னிப்புக்கோரவுமில்லைபிராயச்சித்தம்மேற்கொள்ளவுமில்லைஎன்பதனையும்இங்குஉங்களுக்குநினைவுபடுத்தவிரும்புகின்றேன்.
அத்தோடு கடந்த 2012 ஏப்ரல் மாதத்தில் தம்புள்ளை பள்ளிவாயல் தாக்கப்பட்டபோது ஜனாதிபதியிடம் சமர்பிப்பதற்காக உலமாக்களாலும் புத்திஜீவிகளாலும் தயாரிக்கப்ட்ட கடிதத்தைதானும் உரிய நேரத்திற்கு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உங்களால் முடியவில்லை. எல்லாம் நடந்து முடிந்து காலம் கடந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதிக்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி யொன்றுவந்தது.
பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்களே!
இங்கு நீங்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளவேண்டும் முஸ்லிம்களின் அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினைகளைப்பற்றி கடிதம் எழுதி கையெழுத்துவைத்து தபாலில் அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தேவையில்லை. அதனை சிவில் சமூகமே செய்துகொள்ளும். மேலும் ஜனாதிபதியை நேரில்சந்திக்க சந்தர்ப்பம் பெற்றுக்கொள்ள முடியாத சாதாரண பொதுமக்கள்தான் மனுக்களை கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார்களேதவிர பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசாங்கத்தின் முக்கிய அங்கத்தவர்களாகவும் இருக்கின்ற உங்களைப்போன்றவர்கள் செய்யவேண்டிய பணிஇதுவல்ல.
மக்களின் பிரச்சினைகளை செய்தியாக சேகரித்து அரசிற்கு தபாலில் அனுப்புவதற்காக உங்களைப்போன்றவர்களை சமூகம் தெரிவுசெய்யவில்லை. அதற்கு நீங்கள் தேவையுமில்லை என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.
முஸ்லீம்களுக்கெதிரான இனவாத பிரச்சாரங்களை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக இப்போது அளுத்கம வன்முறைகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் விளைவு முஸ்லிம்உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன.
இன்னும் பலபேர் ஊனப் படுத்தப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ளனர். நூற்றுக்கணக்கான கடைகளும் வீடுகளும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் பலநூறுமில்லியன் ரூபாய்களாகும்.
அளுத்கம வன்முறைகளின் பின்னணி அது நடத்தப்பட்டவிதம் என்பனவை பார்க்கும்போது இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும் என்பதுதெளிவான உண்மையாகும்..
ஏனெனில்…..
• அளுத்கமவன்முறைகளுக்குக்காரணமாகஅமைந்தஇனவாதமனோநிலைதோற்றுவிக்கப்படுவதற்குஇந்தஅரசாங்கமேஅனுமதித்திருந்தது.
• 12.06.2014அன்றுநடந்தவீதிப்போக்குவரத்துத்தகராறுபொலிசாரால்,லகுவாகத்தீர்த்துவைக்கப்பட்டிருக்கமுடியும்என்றபோதும்கூடஅதுசிங்களமுஸ்லிம்இனவாதமுறுகலாகமாற்றப்படுவதற்குசந்தர்ப்பம்வழங்கப்பட்டது.
• ஏற்கனவேபதற்றமானசூழல்நிலவியபோதிலும்கூடடீடீளுபோன்றஇனவாதஅமைப்புக்கள்ஒன்றிணைந்துகூட்டம்ஒன்றினைநடத்துவதற்குவழங்கப்பட்டதுமாத்திரமல்லாமல்அக்கூட்டத்தின்போதுதான்அளுத்கமவன்முறைகள்நேரடியாகதூண்டப்பட்டன.
• வன்முறைகளைக்கட்டுப்படுத்திமுஸ்லிம்களைப்பாதுகாப்பதற்கெனஅளுத்கமவில்குவிக்கப்பட்டபடையினரும்போடப்பட்டஊரடங்குச்சட்டமும்இருக்கத்தக்கதாகவேமுஸ்லிம்கள்மீதானஇந்தஇனவாதபயங்கரவாதத்தாக்குதல்நடாத்தப்பட்டது.
இப்படியாகஅளுத்கமமுஸ்லிம்கள்மீதுநிகழ்த்தப்பட்டவன்முறைகளுக்குஅரசாங்கமேபொறுப்பாகும்என்பதுமிகத்தெளிவானஒன்றாகஇருக்கின்றநிலையிலும்முஸ்லிம்களின்பிரதிநிதிகளில்ஒருவர்என்றவகையில்வாய்திறந்துஇந்தஉண்மையைச்சொல்வதற்கானதைரியம்உங்களுக்குஇருக்கவில்லை.
அளுத்கமசம்பவங்கள்தொடர்பாகநீங்கள்தெரிவித்திருந்தகருத்துக்களில்ஒருகோழைத்தனமும்அரசாங்கத்திடம்நல்லபெயர்வாங்கிபதவியைப்பாதுகாத்துக்கொள்ளவேண்டும்என்றநயவஞ்சகத்தனமும்நிறைந்துகாணப்பட்டது.
பாலஸ்தீனவிடயத்தில்அரபுநாடுகள்நடந்துகொள்வதைப்போல…..
மேலும்,அளுத்கமவன்முறைகள்முழுநாட்டையுமேஅதிர்ச்சியில்உறையவைத்திருந்தநேரம்பாதிக்கப்பட்டசமூகத்தின்பிரதிநிதிகள்என்றவகையில்உங்களைப்போன்றஅரசியல் வாதிகளிடம் பொதுமக்கள் குறைந்த பட்சமாக எதிர்பார்த்தவை இவைதான்.
• உடனடியாகக்கூடிஒருபொதுவேலைத்திட்டத்திற்குவரவேண்டும்.
• ஒரேகுரலில்முஸ்லிம்களுக்குஇழைக்கப்பட்டஅநீதிகளையும்அதற்குப்பொறுப்பானஅரசாங்கத்தினையும்கண்டிக்கவேண்டும்.
• இனவாதநடவடிக்கைகளைஇனிமேலும்அனுமதிக்காதஉறுதியானஅழுத்தத்தைஅரசாங்கத்திற்குகொடுக்கவேண்டும்.
• முஸ்லிம்சமூகம்மீதுநிகழ்த்தப்பட்டஅநீதிகளையும்அதற்குக்காரணமானவர்களையும்அம்பலப்படுத்துவதற்கானநல்லவாய்ப்பாகஇதனைபயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
• பாதிக்கப்பட்டமுஸ்லிம்களுக்குநீதியையும்பொருளாதாரநிவாரணத்தையும்முழுமையாகப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.இதுஎதுவுமேநடக்கவில்லை.குறைந்தபட்சம்முஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்கள்எல்லோரும்ஒன்றிணைந்து ‘ இதைஎப்படிகையாளமுடியும்’
எனகலந்தாலோசிப்பதற்காகஒருசந்திப்பைத்தானும்நடத்துவதற்குஉங்களால்இதுவரைமுடியவில்லை.
ஆனாலும்தமதுஎதிர்ப்புகளைக்காட்டுவதற்குமுன்வந்தமுஸ்லிம்சமூகத்தின்கண்டனநடவடிக்கைகளைகொச்சைப்படுத்திஅரசாங்கத்தைத்திருப்திப்படுத்துவதற்குமாத்திரம்நீங்கள்முயற்சிசெய்தீர்கள்.முஸ்லிம்களின்கடையடைப்புகண்டனநடவடிக்கைகள்பிசுபிசுக்கச்செய்வதற்குஇறுதிவரைபல்வேறுமுயற்சிகள்மேற்கொண்டநீங்கள்உங்கள்முயற்சிவெற்றியளிக்காதநிலையில் ‘இதுபோன்றகடையடைப்புக்களால்ஒன்றையும்சாதிக்கமுடியாது’ என்றதொனியில்அறிக்கைவிட்டீர்கள்.
பிரதியமைச்சர்ஹிஸ்புல்லாஹ்அவர்களே!
உங்களைப்போன்றமக்கள்பிரதிநிதிகளின்கையாலாகாத்தனம்காரணமாகவேகடையடைப்புநடத்திதமதுகண்டனத்தைஅரசாங்கத்திற்குசொல்லவேண்டியநிலைக்குமக்கள்தள்ளப்பட்டார்கள்என்பதனைநீங்கள்மறந்துவிடக்கூடாது.
இன்னும்ஒன்றையும்இங்குஉங்களிடம்கேட்கவேண்டும்.உள்நாட்டுசகோதரமுஸ்லிம்கள்மீதுநிகழ்த்தப்பட்டஅநீதியைக்கண்டித்துஅதேநாட்டில்முஸ்லிம்கள்மேற்கொள்ளும்கட்பையடைப்புப்போராட்டம்எதுவிததாக்கத்தினையும்ஏற்படுத்தாதுஎன்றால்நீங்கள்காத்தான்குடியில்நடாத்தும்கண்டனஊர்வலம்மாத்திரம்எப்படிபலஆயிரம்மைல்களுக்குஅப்பால்உள்ளகாஸாவிடயத்தில்தாக்கத்தைஉண்டுபண்ணும்
உங்களைப்போன்றமக்கள்பிரதிநிதிகள்மக்களுக்குஇழைக்கப்பட்டஅநீதிகளையும்அதற்குகாரணமானவர்களையும்அம்பலப்படுத்தத்தவறியதன்விழைவாகஇஇன்று…..
• அளுத்கமவன்முறைகளுக்குமுஸ்லிம்களேகாரணம்எனபொலிஸ்மாஅதிபரும்,வெளியுறவுஅமைச்சரும்சொல்கிறார்கள்.இதனையேதனதுஉத்தியோகபூர்வமானகருத்தாகஐ.நா.சபைக்குஅரசாங்கம்சொல்லியிருக்கிறது.
• துப்பாக்கிச்சூட்டின்காரணமாககொல்லப்பட்டமுஸ்லிம்கள்கத்தியால்குத்தப்பட்டேகொல்லப்பட்டார்கள்என்றபொய்யானமருத்துவஅறிக்கைமுஸ்லிம்கள்மீதுதிணிக்கப்படுகின்றது.
• சட்டநடவடிக்கைஎடுக்கிறோம்என்றபெயரில்வன்முறைகளுக்குகாரணமானவர்களைஅப்படியேவிட்டுவிட்டுஅப்பாவிமுஸ்லிம்கள்கைதுசெய்யப்பட்டார்கள்.
• அளுத்கமசம்பவங்களுக்குப்பின்னரும்கூடடீடீளுபோன்றஅமைப்புக்களின்இனவாதநடவடிக்கைகளுக்குஅனுமதிவழங்கப்பட்டேவருகின்றன.
அநீதிஇழைக்கப்பட்டபலஸ்தீன்மக்கள்மீது ‘வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள்’
என்றபழிசுமத்தப்படுவதுபோலவேதான்உங்களைப்போன்றவர்களின்கையாலாகாத்தனமானநடவடிக்கைகள்காரணமாகபாதிக்கப்பட்டமுஸ்லிம்கள்மீதும்இன்று ‘வன்முறையத்தூண்டியவர்கள்’ என்றபழியும் ‘தீவிரவாதிகள்’ என்றமுத்திரையும்குத்தப்படுகிறது.
மேலும்,அளுத்கமவன்முறைநடந்துமுடிந்ததருனத்த்தில்முஸ்லிம்கள்மீதுஇழைக்கப்பட்டஅநீதிகளைபாராளுமன்றத்தில்உரத்துச்சொல்வதற்கும்அரசாங்கம்தனதுஅடிப்படைக்கடமைகளைச்செய்யத்தவறியமைக்குஎதிராககண்டனத்தைப்பதிவுசெய்வதற்குமானஅருமையானசந்தர்ப்பம்ஒன்;றுகிடைத்தது.
அதுதான்சர்வதேசவிசாரனைகள்தொடர்பில்பாராளுமன்றத்தில்கொண்டுவரப்பட்டபிரேரனையும்அதன்மீதானவாக்கெடுப்புமாகும்.அந்தசந்தர்ப்பத்தில்கூடநீங்களோஅல்லதுஉங்கள்கட்சியின்பிரதிநிதிகளோமுஸ்லிம்களுக்காககுரல்கொடுத்துபாராளுமன்றத்தில்எதுவும்பேசவில்லை.முஸ்லிம்பிரதிநிதிகள்தமதுஅதிருப்திகளைவெளிப்படுத்தும்முகமாகஅப்பிரேரணைக்குஎதிராகவாக்களிப்பார்கள்எனஅத்தனைபேரும்எதிர்பார்த்துஇருந்தநேரம்அதனைசெய்யாமல்நீங்களும்உங்கள்கட்சிஉறுப்பினர்களும்கோழைத்தனமாகபாராளுமன்றத்தில்இருந்துதலைமறைவாகினீர்கள்.
அளுத்கமவிடயத்தில்முஸ்லிம்களுக்குஆதரவாககுரல்கொடுத்தஉள்ளுர்மற்றும்சர்வதேசஊடகங்களும்ஆர்வளர்களும்இந்தக்கோழைத்தனத்தைமிகுந்தஆச்சரியத்தோடுநோக்கினர்.
தமதுஉயிரையும்பணயம்வைத்துஅளுத்கமகலவரத்தின்போதுகளத்தில்இறங்கிமுஸ்லீம்களைகாப்பாற்றிகாயத்திற்குள்ளானபாராளுமன்றஉறுப்பினர்தேவப்பெருமமுஸ்லிம்களுக்காகபாராளுமன்றத்தில்ஆற்றியஉரைக்குபக்கபலமாகவேனும்உங்களைப்போன்றவர்களால்இருக்கமுடியவில்லை.
அளுத்கமவிடயத்தில்சட்டம்ஒழுங்கைநிலைநாட்டத்தவறியஅரசாங்கத்தின்போக்கினைகண்டிக்கும்பிரேரனையொன்றினைமுஸ்லிம்கள்சார்பாகஉங்களைப்போன்றஅரசியல்வாதிகள்முன்வைத்துபாராளுமன்றத்தில்விவாதிக்கவேண்டும்எனமுழுமுஸ்லிம்சமூகமும்எதிர்பார்த்திருந்தது.
ஆனால்அதற்கானதுணிவுஉங்களுக்குஇருக்கவில்லை.ஆனாலும்அந்தப்பணியினைசெய்வதற்குஜே.வி.பிஇன்தலைவர்அனுரகுமாரதிசானாயக்கமுன்வந்தார்.இதுதொடர்பானபிரேரனையினைமுன்வைத்தார்.அதுதொடர்பானவிவாதம்கடந்தஐ_லை 10ஆம்திகதிநடைபெறும்எனமுன்னறிவுப்பும்செய்யப்பட்டது.
ஆனால்வேதனைக்குரியவிடயம்என்னவென்றால்……முஸ்லிம்களுக்குஇழைக்கப்பட்டஅநீதிகளைபாராளுமன்றத்தில்உரத்துப்பேசிஉத்தியோகபூர்வபாராளுமன்றப்பதிவுகளில்பதிவுசெய்யக்கூடியஅந்தஅருமையானசந்தர்ப்பத்தைபுறக்கனித்துநீங்கள்எல்லோரும்ஒடிஒளிந்தீர்கள்.
உங்களில்சிலர்அன்றையதினத்தில்முஸ்லிம்கள்சார்பாகவிவாத்தில்கலந்துகொள்ளாமல்கொழுப்பில்ஐந்துநட்சத்திரஹோட்டல்ஒன்றில்இப்தார்நடாத்திகுதூகலித்துக்கொண்டிருந்ததாகசெய்திகள்கிடைத்தன.
உங்களதுஇந்தபொறுப்பற்றநடவடிக்கைகளின்விளைவாக….அளுத்கமசம்பவத்திற்குமுஸ்லிம்களேகாரணம்எனமுன்வைக்கப்பட்டகருத்துக்கள்மறுதலிக்கப்படாததன்காரணமாகபாராளுமன்றஹன்சாட்புத்தகத்தில்அவைஅப்படியேநிரந்தரமாகபதிவாகியுள்ளன.
முஸ்லிம்கள்விடயத்தில்உங்களைப்போன்றபாராளுமன்றஉறுப்பினர்கள்செய்தமிகமோசமானகடமைப்புறக்கணிப்பும்துரோகமுமாகவேஇதனைநோக்கவேண்டியுள்ளது.
மற்றுமொருவிடயத்தினையும்இங்குசுட்டிக்காட்டவேண்டும்.அதாவதுபலஸ்தீனப்பிரச்சினையென்பதுமுஸ்லிம்சமூகத்தைப்பொருத்தவரையில்அவர்கள்வாழும்நிலம்தொடர்பானவெறும்அரசியல்பிரச்சினைகிடையாது.மாறாகஒவ்வொருமுஃமினதும்ஈமானுடன்பின்னிப்பிணைந்தஒருபிரச்சினையாகும்.அந்தவகையில்பார்க்கும்போதுமுஸ்லிம்களின்ஈமானியபெறுமானங்களைமதித்துபாதுகாக்கின்றவிடயத்தில்உங்களின்கடந்தகாலசெயற்பாடுகளும்கூடமுஸ்லிம்களைஏமாற்றமடையச்செய்வதாகவேஇருக்கிறன.
காத்தான்குடிப்பிரதேசத்தில்உங்களின்அற்பஅரசியல்இலாபங்களுக்காகஅகீதாவிற்குமுரனானபல்வேறுசக்திகளுக்குஉயிரூட்டிவளர்த்துசக்திபெறச்செய்துஅவற்றைஇன்னும்வாழவைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இதுஉண்மையானமுஸ்லிம்களுக்கும்அவர்களின்ஈமானியஉணர்வுகளுக்கும்நீங்கள்செய்யும்துரோகமாகும்என்பதைமறந்துவிடக்கூடாது.
எனவே,பிரதியமைச்சர்ஹிஸ்புள்ளாஹ்அவர்களே.!
இந்நாட்டில்முஸ்லிம்கள்சார்பானமக்கள்பிரதிநிதிகளில்ஒருவராகஇருந்துகொண்டுஅதன்மூலம்கிடைக்கும்அத்தனைசொகுசுகளையும்சொந்தஇலாபங்களையும்அனுபவித்துக்கொண்டுஅம்மக்கள்ஆபத்தில்சிக்கியிருக்கின்றபோதுஅவர்களுக்காககுரல்கொடுக்கத்தானும்உங்களைப்போன்றவர்கள்முன்வராமல்இருப்பதுபெரும்துரோகத்தனமாகும். என்பதைமறந்துவிடாதீர்கள்.
இந்நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அடிப்படைப்பணியைச்செய்யாதநீங்கள்பலஸ்தீன்மக்களுக்காககுரல்கொடுக்கபுறப்பட்டிருப்பதானதுஒருநயவஞ்சகசெயற்பாடாகவேதெரிகிறது.
ஏனெனில்நீங்கள்தங்கியிருக்கும்அரசாங்கத்தைகண்டித்தால்உங்கள்பதவிக்குப்பிரச்சினைஏற்படலாம்என்பதனாலேயேகோழைத்தனமாகஅடங்கிக்கிடக்கிறீர்கள்.
இஸ்ரேல்பயங்கரவாதத்தைக்கண்டித்தால்அரசாங்கம்கோபித்துக்கொள்ளாதுஎன்பதனைஉறுதிசெய்தபின்னர்’காஸாமக்களுக்காககுரல்கொடுக்கிறேன்’என்றுபேரணிநடத்துகின்றீர்கள்.
இதனைநயவஞ்ககத்தனம்என்றல்லாதுஎவ்வாறுஅழைப்பது..?
எனவே,பிரதியமைச்சர்ஹிஸ்புள்ளாஹ்அவர்களே.!
அல்லாஹ்வைப்பயந்துகொள்ளுங்கள்.உங்கள்கடமைகள்தொடர்பாககேள்விகள்கேட்கப்படும்அந்தநாளையும்பயந்துகொள்ளுங்கள்.உங்களின்பதவிஅதிகாரம்உங்களைச்சுற்றியிருக்கும்பாதுகாப்புபரிவாரங்கள்என்றுஎதுவுமேஇல்லாமல்ஒருஅற்பமனிதனாகஎழுப்பிநிறுத்தப்படும்அந்தசூழ்நிலையைபயந்துகொள்ளுங்கள்.
மக்களை ஏமாற்றுகின்ற நயவஞ்சகத்தனமானஅரசியல் வேஷங்களைகளையுங்கள். இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கு விசுவாசமான ஒருபிரதிநிதியாக நடந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்.
அப்துல் வஹாப்
கொழும்பு
07.08.2014
Published by

Leave a reply to Ray is ismail Cancel reply