தெஹ்ரான்: ‘காஸாவுக்காகப் போராடும் ஹமாஸ் இராணுவத்திற்கு, இஸ்ரேலைத் தாக்குவதற்காக நாங்கள்தான் ஏவுகணை நவீன தொழிநுட்பக் கருவிகளையும், ஆயுத தளபாடங்களையும் வழங்கினோம்’ என ஈரானின் சமயோசித பகுத்தறிதல் கவுன்ஸிலின் செயலாளர் மொஹ்ஸின் ரிசாயி குறிப்பிட்டுள்ளார்.
‘ஹமாஸ் மக்களைப் பாதுகாப்பதற்காக பதுங்குக் குழிகளை அமைத்து வருகின்றது. இதனையும் தற்பொழுது இஸ்ரேல் அழித்து வருகிறது. பலஸ்தீனத்தை மீட்கும் வரைக்கும் தங்களது நவீன ஏவுகணை ‘ட்ரான்ஸ்ஃபர்’ தொழிநுட்பத்தை காஸாவுக்கு வழங்குவோம். பலஸ்தீன் மக்கள் கொல்லப்படுவதை வாய்மூடியிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஈரான் ஒருபோதும் இருக்காது’ எனவும் மொஹ்ஸின் ரிஸாயி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு வெளிப்படையாகவே அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதே போல் ஈரான் ஹமாஸூக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது.
அரபு வலயத்தில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தலுக்குரிய ஒரே நாடு ஈரான்தான். ஆனால் அமெரிக்காவுக்கு நேரடியாக ஈரானிடம் மூக்கை நுழைக்க முடியாது. ஈராக்கை மிக விரைவில் வீழ்த்தி, ஈராக் போராளிகளை வைத்தே ஈரானை வீழ்த்த அமெரிக்கா எடுக்கும் 4 தசாப்த வியூகம் இன்னும் அமெரிக்காவுக்கு கனியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்)
Published by
![hamasrockets[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/08/hamasrockets1.jpg?w=150&h=109)
![hamasrockets[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/08/hamasrockets1.jpg?w=400&h=291)
Leave a comment