மின்சாரம் தாக்கி இளைஞன் பலி! ஆய்தியமலை – நெல்லூரில் சம்பவம்

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

நெல்லூர்: மட்டக்களப்பு மாவட்ட ஆய்தியமலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட  நெல்லூர் எனும் கிராம வீதிகளுக்கு மின் இணைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று மாலை மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இவர் பொலநறுவை மாவட்ட ஹிங்குராகொட, யுதகெனாவ பிரதேசத்தை சேர்ந்த மாரசிங்க முதியான்சலாகே விபுலரத்ன (வயது-22) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

‘தமயந்தி கொன்றக்ட்சன்’ என்ற தனியார் நிறுவனம் ஆய்தியமலை பிரதேசத்தில் எடுத்துக்கொண்ட  வீதிகளுக்கு மின் இணைப்பு செய்யும் தொழிலில் இணைந்து  கொள்ள நேற்றைய முந்தினம்  அம்பாறையிலிருந்து இங்கு வந்ததாகவும் கொந்தராத்து உரிமையாளர் HMRS. பண்டார தெரிவித்தார். 

unnamed m

நேற்று மாலை மின் கம்பி இழுக்கும் வேலை ஆரம்பிப்பதற்கு முன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை அவதானிக்காமல் மின்கம்பியை தன் கையால் பிடித்த போதுதான் இவ்வனர்த்தம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டுவரப்பட்ட இவரது சடலம் இன்று காலை பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களால் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவரது தந்தையான MM. நிமல் கருணாரத்ன என்பவரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

ஆய்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.  

unnamed

Published by

Leave a comment