லண்டன்: காஸாவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை தனக்கு அதிருப்தியடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானிய வெளிநாட்டு அலுவலக அமைச்சர் பரோன்ஸ் வார்ஸி எனும் பெண் அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இன்று காலை இராஜினாமாச் செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010ம் ஆண்டு ஆளும் கட்சியான கொன்ஸவேர்டீவ் கட்சியில் இணைந்து 2012ல் தற்போதய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் அமைச்சரவையில் வெளிநாட்டு அலுவலக அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.
காஸாவுக்கு ஆதரவாக எந்த நீண்டகால கொள்கையும் தங்களது அரசாங்கத்தில் கிடையாது என பிரித்தானியப் பிரதமர் கூறியிருந்த நிலையில் இந்த இராஜினா இடம்பெற்றிருக்கிறது.
பாகிஸ்தான் வம்சாவழியான 43 வயதுடையபரோன்ஸ் வார்ஸி, 2010 ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் முதலாவது முஸ்லிம் பெண்ணாக ஆளும் கட்சிக்கு தேர்வானார்.அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஓர் சட்ட ஆலோசகராக இருந்தார்.
காசா விடயத்தில் பிரித்தானியாவின் அரசாங்கக் கொள்கை தனக்கு திருப்பதியளிக்கவிலை எனவும், இதன் காரணமாக தான், தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இன்று காலை அறிவித்தார்.
தங்களது அரசாங்கத்தின் கொள்கை ஓர் மனிதாபிமானமற்றது. ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் வார்ஸி குறிப்பிட்டிருந்தார்.
Published by



Leave a comment