கிரான்: ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான், கோரகள்ளிமடு கொலனியில் 44 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான நாகமணி கிருஷ்ணபிள்ளை என்பவர் இன்று காலை தனது வீட்டின் முன் காணப்படும் மா மரக்கிளையில் கழுத்தில் துணியொன்றால் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
தினமும் மது போதையுடன் வீட்டுக்கு வரும் இவர், தனது மனைவி, மக்களுக்கு கற்களினால் எறிந்து வீட்டைவிட்டு துரத்துவது வழமையான நிகழ்வாக இருந்த போதிலும், இன்று காலையும் அவ்வாறே போதையுடன் வந்து மனைவி, பிள்ளைகளை துரத்திவிட்டு மா மரத்தில் தொங்கி உயிரைப் போக்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மனைவி, பிள்ளைகள் வீட்டுக்கு வந்தபோதே இவர் தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனை அறிந்த ஏறாவூர் பொலிசார், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப்பரிசோதனை மேற்கொண்டபின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு ஏறாவூர் பொலிசாரைப் பணித்தார்.
Published by

Leave a comment