காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஷஹீதாகும் குழந்தைகளின் ஜனாஸாக்களை ஐஸ்பழம் வைக்கும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்கும் புகைப்படங்கள் காசாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாஸாக்கள் அழுகிப் போவதை தடுக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாததால் அங்குள்ள மக்கள் இவ்வேற்பாட்டைச் செய்திருக்கின்றனர்.
காசாவில் உள்ள ரபாஹ் நகரின் பல பகுதிகளின் மீது இஸ்ரேலின் விமானப் படையும், தரைப் படையும் நடத்திய தாக்குதலில் அந்நகரில் உள்ள நஜ்ர் மருத்துவமனை இடிந்து தரைமட்டமாகியது.
இதற்கிடையே, இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் ஷஹீதானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜனாஸாக்களை அழுகிப் போகாமல் பாதுகாக்க வேறு வழியின்றி தவிக்கும் மக்கள், தாக்குதலில் ஷஹீதான குழந்தைகளின் ஜனாஸாக்களை ஐஸ்கிரீம்-குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்கும் அவலக் காட்சி நிறைந்த புகைப்படங்களை காசாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரபுலகம் கண்களை இறுக மூடி மல்லாக்கப்படுத்து கனவுகானுகிறது நாளைய விடியலுக்காக….
Published by




Leave a comment