தெஹ்ரான்: ‘காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனித நேயமற்ற தாக்குதலை நேரடியாகவே அவதானித்து, அருகிலிருந்து செயற்பட்டுவரும் காஸாவுக்கான ஐ.நா அமைப்பானது ஓர் முதுகெழும்பற்றது’ என ஈரானின் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி கண்டித்திருக்கிறார்.
‘பெயரளவில் அறிக்கைகளை மாத்திரம் தினமும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் காஸாவின் ஐ.நா உத்தியோகத்தர்கள், இதுவரைக்கும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதற்கு எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. பேருக்கு மாத்திரம் சில மணித்தியால யுத்த நிறுத்தங்களை மேற்கொள்ள ஐ.நா முயற்சித்தாலும் இஸ்ரேலின் தாக்குதலும் ஊடுறுவலும் தொடர்ந்து இடம்பெற்று வருவது கண்டனத்திற்குரியது’ எனவும் ஹஸன் ரூஹானி ஐ.நாவை சாடியிருக்கின்றார்.
Published by
![iran-flag1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/iran-flag11.jpg?w=150&h=128)
Leave a comment