ஏறாவூரில் விபத்து: சாரதியின் தூக்க கலக்கத்தால் பாதையில் சென்று கொண்டிருந்த இருவர்பலி!

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்தொன்றில் இருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி இன்று காலை வந்த வாகனம் ஒன்று சாரதியின் தூக்க கலக்கத்தால் பாதையை விட்டு விலகி, நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.

இதனால் 27 வயது இராஜேந்திரன் மற்றும் அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். ஏறாவூரை சேர்ந்த பஷீர் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

eravur

eravur (2)

eravur (3)

Published by

Leave a comment