இஸ்ரேலின் 7 மணித்தியால யுத்தநிறுத்தத்தை நிராகரித்தது ஹமாஸ்!

israel gaza– MJ

ஜெரூஸலம்: இன்று உள்ளுர் நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு விடுத்திருந்த இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது. காஸாவைவிட்டு ரஃபாவில் தாக்குதலை மேற்கொண்டுவரும் இஸ்ரேல், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா ஊடாக விடுத்திருந்தது.

‘இஸ்ரேலின் தற்காலிக யுத்த நிறுத்தம் வேடிக்கையானது. ரஃபா பிரதேசத்திற்குள் இஸ்ரேலிய வீரர்கள் ஊடுறுவி இருந்துகொண்டே யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் கோருகிறது. அதுவும் சில பிரதேசங்களில் தாக்குதல் நடாத்துவோம் எனவும் கோரியுள்ளது. இஸ்ரேலின் தந்திரோபாய யுத்த நிறுத்தத்தை தாங்கள் ஏற்கப் போவதில்லை’ எனவும், ‘அத்துமீறி நுழையும் இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்படுவார்கள்’ எனவும் ஹமாஸ் எச்சரித்திருக்கின்றது.

israel gaza

Published by

Leave a comment