இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக்கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

red cross– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் Red Cross காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக்கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று அதன் காரியாலயத்தில் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துள்ளா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக மட்டக்கள்பபு மாவட்ட முன்னாள் செஞ்சிலுவைச்சங்க உப தலைவரும் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பவருமான ஏ.ஜி.எம் றபீக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

red cross

அவர் தனதுரையில், சுவிட்டசர்லாந்து நாட்டில் சிறு கைத்தொழிலை அடிப்படையாகக்கொண்டு பல தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மட்டடைத்தாளைக்கொண்டு பல உற்பத்திப்பொருட்களைச் செய்கின்றனர். இங்கே பன்பாய் உற்பத்தியினை அதிகரிக்க ஊக்கமளிக்கலாம். அதேபோல் வட்டியில்லாக்கடன் வழங்குவதன் ஊடாக வறிய மக்களின் பொருளாதாரத்தினை மேம்படையச்செய்யலாம் இதற்கு Red Cross உறுப்பினர்களின் வழிகாட்டலும் கண்காணிப்பும் அவசியமாகும்

red cross

இதற்கு ஒரு நிதி மூலத்தினை உருவாக்கிக்கொள்ளமுடியும் அத்துடன் Red Cross இல் பல தொழில்வாய்ப்பபுக்கள் உள்ளது இதற்கு முயற்சி செய்து காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் இப்பதவிகளை அதிகம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மாவட்டத்தினைப்பொருத்தவரையில் Red Cross காத்தான்குடி கிளை நல்ல நிலையில் உள்ளது இதற்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததுடன் இதன் ஆரம்பகர்த்தாவான முன்னாள் பிரதேச செயலாளர் ஹினாயா ஷரீபா மற்றும் கமர்தீன் ஆசிரியரையும் நினைவுபடுத்தியதுடன் காத்தான்குடி கிளைக்கு சிறிய நிதி பங்களிப்பினையும் வழங்கிவைத்தார்.

Published by

Leave a comment