24வது ஆண்டு சுஹதாக்கள் நினைவாக ஹூஸைனியா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் ,விஷேட மார்க்க சொற்பொழிவும்,பிரார்த்தனையும்

hussainiya – பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிகள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால்

கொடூரமாக கொள்ளப்பட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக இன்று 03-08-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் விஷேட மார்க்க சொற்பொழிவும்,துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதன் போது விஷேட மார்க்க சொற்பொழிவை மௌலவி எம்.ஐ.எம்.முஸ்தகீம் (பலாஹி) நிகழ்த்தினார்.

இங்கு விஷேட துஆ பிரார்த்தனையை மௌலவி எம்.எச்.மன்சூர் (பலாஹி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஹூஸைனியா பள்ளிவாயலில் தலைவர்,செயலாளர் ,பொருளாளர் உட்பட அதன் நிர்வாகிகள் ,சுஹதாக்களின் குடும்பத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment