24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தினம் காத்தான்குடியில் அனுஷ்டிப்பு

meera (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடூரமாக கொல்லப்பட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக

03-08-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் விஷேட மார்க்க சொற்பொழிவும்,துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதன் போது விஷேட மார்க்க சொற்பொழிவை மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) நிகழ்த்தினார்.

இங்கு விஷேட துஆ பிரார்த்தனையை மௌலவி ஏ.ஜி.எம். அமீன் (பலாஹி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில்; மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் சுபைர் ,செயலாளர் அனஸ் ,பொருளாளர் உட்பட அதன் நிர்வாகிகள் ,சுஹதாக்களின் குடும்பத்தினர்கள்,உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment