2013 மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விருது விழாவில் 9 அங்கவீன இளைஞர்,யுவதிகள் உட்பட 30 தமிழ்-முஸ்லிம் இளைஞர்,யுவதிகள் விருது வழங்கி கௌரவிப்பு

batticaloa (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயமும்,மாவட்ட இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த 2013 இளைஞர் விருது விழா 02-08-2014 நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட இளைஞர் விருது விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

batticaloa (2)

இங்கு அறிவிப்பாளர் போட்டி தமிழ்,சிங்கள ஆங்கிலம் பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், அடங்கலாக பல்வேறு கலை, கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா மற்றும் அதிதிகளினால் இளைஞர் விருதும், சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

batticaloa (3)

இதன் போது இளைஞர்,யுவதிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

இவ் மாவட்ட இளைஞர் விருது விழாவில் 9 அங்கவீன இளைஞர்,யுவதிகளும், 1 சிங்கள இளைஞரும், ஆங்கில போடடியில் பங்குபற்றி 2 யுவதிகளும் ,18 தமிழ் முஸ்லிம் இளைஞர்,யுவதிகளுமாக 30 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டு- மாவட்ட காரியாலய உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தெரிவித்தார்.

hizbullah

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கே.கோபாலரட்ணம், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி கே.கலாராணி உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலய பிரதிநிதிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment