‘மாணவர்களின் சமூகப் பொறுப்புக்கள் நலிவடைந்த நிலையில் உள்ளது’

???????????????????????????????– பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.சி.ஏ.அஸீஸ்

காத்தான்குடி: ‘பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் மாணவர்களின் ஒழுக்கம் மிகவும் அவசியமானது. மாணவர்களுடைய சமுகப் பொறுப்புக்கள் இன்று நலிவடைந்துள்ள நிலையே காணப்படுகிறது’ என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜனாப். ஏ.சி.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கு நிதி வழங்கியவர்களுடனான கலந்துரையாடல், கல்லூரி பரீட் மண்டபத்தில் அதிபர். யு.எல். அப்துல் முபாறக் தலைமையில் நடைபெற்ற போது, கருத்துத் தெரிவித்த அஸீஸ் மேலும் கூறுகையில்,

இன்று மாணவர் சமூகம் கையடக்க தொலைபேசி பாவனையினால் சீரழிகின்றனர். ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்க வேண்டிய கடற்பாடு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஒரு பண்பாடுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நல்ல பெறுபேறுகளைப் பெற முடியும். இப் பாடசாலையில் ஆசிரியர்கள் மிகவும் அற்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார்கள் என்பதை நன்றியுடன் தெரிவிக்கிறேன்.

???????????????????????????????

அண்மைக்காலமாக இப்பாடசாலை கணித, விஞ்ஞான துறைகளில் மிகவும் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்று வருகிறது. ஆனால் வர்த்தக, கலைத் துறைகளில் பெறுபேறுகள் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு இல்லை என்பதை புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

நமது மாணவர்கள் சகல துறைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். பரீட்சை எழுதி விட்டு பெறுபேறு கிடைக்கு முன்னரே பிரத்தியோக வகுப்புகளுக்குச் சென்று வருகின்றனர். சில பெற்றோர்கள் கௌரவத்திற்காக பிள்ளைகளை ஒரு துறையினைக் கற்கும்படி திணிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். ஒரு மாணவன்தான் தனது உயர் கல்வியை எந்தத் துறையில் கற்பது எனத் தீர்மானிக்க வேண்டும்.
கூடுதலாக பாடசாலை ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

azees

சகல வழிகளிலும் பாடத்திட்டங்களை மாணவர்கள் சேகரித்துக் கொள்கின்றனர். ஆனால் அதனை இறுதி நேரத்தில் ஒழுங்குபடுத்தி கற்பதற்கு தவறுகின்றனர். இதனாலேயே அதிக மாணவர்கள் பரீட்சையில் அடைவுகளை பெறமுடியாதுள்ளது. எதிர் காலத்தில் பழைய மாணவர் சங்கம் கல்வி அபிவிருத்தியில் பல முன்னெடுப்புக்களைச் செய்யவிருக்கிறது எனவும் அஸீஸ் கருத்துத் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பொருளாளர். எம்.ஏ.எம்.சுஹைர் கணக்கறிக்கையினை முன்வைத்ததுடன், பிரதி அதிபர் எம்.எல்.எம்.லாபிர் கடந்த வருட பெறுபேறுகள் பற்றி விளக்கமளித்தார்.

salma

Published by

Leave a comment