சுஹதாக்கள் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

subair cc 03-08-2014– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடூரமாக கொல்லபட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக தேசிய

சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் 03-08-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

subair cc 03-08-2014

இதன் போது பள்ளிவாயல் தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின், தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்வி அந்நிறுவனத்தின் செயலாளர் எம்.ஐ.நாஸர் மற்றும் காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ,அதன் செயலாளர் அனீஸ் அஹமட், காத்தான்குடி ஹூஸைனியா பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் பழீலுர் றஹ்மான் மற்றும் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

food

food (2)

Published by

Leave a comment