5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ் மொழி புறக்கணிப்பு

Grade 5 Exam Guide Pics– PMGG ஊடகப்பிரிவு

கொழும்பு: எதிர்வரும் 2014 ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள், விடைகள் மற்றும் 2014ல் எதிர்பார்க்கப்படும் மாதரி வினாக்கள் அவற்றுக்கான விடைகள் உள்ளடங்கிய தொகுப்பொன்றினை கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பகுதி 2014 மே மாதம் முதல்பகுதியில் வெளியிட்டிருந்தது.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட இவ்வெளியீட்டின் தமிழாக்கத்தில் 2005-2013 வரையான வினாத்தாள்களும் விடைகளும் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்பு தமிழ் மொழிப்பதிப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.

இதுகுறித்து கல்வி அமைச்சின் வெளியீட்டுப்பகுதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மொழிபெயர்ப்பிற்கான வசதிகள் இன்மை காரணமாக அவற்றை மொழிபெயர்க்கவில்லை எனவும் பாடசாலைகள் தோறும் குறித்த சிங்கள மொழிமூல வினாத்தாள்களை மொழிபெயர்ப்பு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு பாரிய மொழி ரீதியான பாரபட்சத்தை எடுத்துக்காட்டும் விடயமாகும்.

Grade 5 Exam Guide Pics

மேற்படி விடயம் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்களுக்கும், மத்திய அரசின் கல்வி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் உடனடியாக தமிழ் மொழிபெயர்ப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் கிடைக்கச்செய்வது கல்வி அமைச்சின் பொறுப்பாகும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது.

Grade 5 Exam Guide Pics (1)

Published by

Leave a comment