‘தாக்குதல் தொடரும், காஸாவின் பெரிய பள்ளிவாயலும், காஸா பல்கலைக்கழகமும், ஹமாஸின் சுரங்கங்களும் இலக்குவைக்கப்படும்’ – இஸ்ரேல்

gaza– MJ

டெல் அவிவ்: ‘ஹமாஸ் யுத்தநிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தாலேயன்றி, தங்களது தாக்குதல் தொடரும்’ என இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெடன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார். ‘தாக்குதல் வரையரையன்றி இடம்பெறும், இவற்றுள் காஸாவின் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஸா பல்கலைக்கழகமும் இலக்கு வைக்கப்படும்’ என இன்று ஏற்கனவே இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில் நெடன்யாகு தற்போது அறிவித்திருக்கின்றார்.

இன்று பலஸ்தீனத்தின் ரஃபா பிரதேசத்தில் தொடர்ந்தும் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இன்றைய தாக்குதல்களில் 24 மணித்தியாலங்களுக்குள் 120 மக்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் மிகப்பெரிய சுரங்கங்கள் ரஃபா பகுதியில் இருப்பதாக இஸ்ரேல் கருதி, இன்று ரஃபாவில் பலத்த ஷெல் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

gaza
அப்பாவி காஸா மக்களின் இரத்தத்தை ருஸிக்க தயாராகும் இஸ்ரேலிய பிரமாண்ட ஆட்டிலரிகள்

‘தாங்கள் விதித்த நிபந்தனைக்கு இஸ்ரேல் கட்டுப்பட்டால் மாத்திரமே யுத்த நிறுத்தம்’ எனவும் ‘இல்லையே போராட்டம் தடையின்றி தொடரும்’ என ஹமாஸ் அழுத்தமாகவே தெரிவித்து வருகிறது.

மூடப்பட்டிருக்கும் ரஃபா-எகிப்து எல்லையை இஸ்ரேல் திறக்க வேண்டும். தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையுமே ஹமாஸ் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால் இஸ்ரேல் சம்மதிக்கவில்லை.

Published by

Leave a comment