ஜனாதிபதியின் மிஹின் லங்கா பாரிய நஷ்டத்தில்…!

Mihin Lanka[1]கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட அரச நிறுவனமான மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நஷ்டத்தை மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நஷ்டம் 2 ஆயிரத்து 866 மில்லியன் ரூபா எனவும் அது 2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஆயிரத்து 956 மில்லியன் ரூபாவாக குறைந்தது என நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தகவல்களுக்கு அமைய மிஹின் லங்கா நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் ஆயிரத்து 968 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியதுடன் அது 2013 ஆம் ஆண்டில் மேலும் 3 ஆயிரத்து 284 மில்லியன் ரூபாவாக நஷ்டம் அதிகரித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள நஷ்டத்தை விட அதிகளவான நஷ்டத்தை அந்த நிறுவனம் எதிர்நோக்கியிருப்பதை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழு கண்டறிந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மிஹின் லங்கா நிறுவனத்திற்கு ஜனாதிபதி வரி விலக்கும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment