காத்தான்குடி: ஒஸ்டா OSDA நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமகால முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பான கருத்தரங்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் உற்பத்தி திறண் ஊக்குவிப்பு அமைச்சின் இணைப்பாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் அவரது கடற்கரை வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
இதற்கான சிறப்பு விரிவுரையினை அல்மனார் அறிவியியற் கல்லூரியின் தலைவரும் கலாநிதியுமான அஷ்ஷெய்ஹ் அஹமட் அஷ்ரப்(phd) நிகழ்த்தியதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகளும் கலந்து சிறப்பித்தனர்.
சிரியா, ஈரான், ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் கொலைகள் கர்ப்பழிப்புகள் அநியாயங்கள் அட்டூழியங்கள் தொடர்பான விளக்கத்தினை வழங்கியிருந்ததுடன் உலகில் 60 வருட கால இஸ்லாமிய இயக்கங்கள் தூய இஸ்லாத்தினை வழர்த்தெடுப்பதற்காக செய்த முயற்சி இன்று பூச்சியமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஒபாமா ஆட்சியில் இருக்கும் வரை இந்த ஸியோனிஸ்ட்டுகளின் அராஜகம் முஸ்லிம்களுக்கெதிராக இருக்கும் எனவும் அதற்காக வல்லரசான அமேரிக்காவை விட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Published by




Leave a comment