கொழும்பு: அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக தென்னா பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அணிக்கு அழைக் கப்பட்டிருப்பதோடு, கடந்த வாரம் தொன்னாபிரிக்காவுடன் தனது கன்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடிய விக்கொட் காப்பாளர் நிரோஷன் திக்வல்ல தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
தென்னாபிரிக்காவுடனான டெஸ்டில் அணியில் பங்கேற்காதபோதும், லஹிரு திரிமான்ன தொடர்ந்தும் டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.
அணி விபரம்: அன்ஜலோ மத்தியூஸ் (தலைவர்), லஹிரு திரிமான்ன (உப தலைவர்), கவ்ஷல் சில்வா, உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, கித்ருவன் விதானகே, நிரோஷன் திக்வல்ல (வி.கா.), ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, ஷமிந்த எரங்க, சுரங்க லக்மால், சானக்க வெலகெதர, தம்மிக்க பிரசாத், நுவன் பிரதீப்.
Published by


Leave a comment