‘கொல்லப்பட்ட 1500 காஸா மக்களுள் 500 சிறுவர்கள் உள்ளடக்கம்’: ஐ.நா

gaza– MJ

காஸா: சுமார் ஒருமாதமாகத் தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரைக்கும் சுமார் 1500 பொதுமக்கள் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு மாத்திரம் 53 பேர் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். 2 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், ஒருவரை ஹமாஸ் பிடித்துக்கொண்டுபோய் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், ‘காஸாவில் கொல்லப்பட்டவர்கள் 1500 பேர்களில் 500க்கும் அதிகமானவர்கள் சிறுவர்களும், பச்சிளம் குழந்தைகளுமே’ என களத்திலிருக்கும் ஐ.நா. உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி, ‘இஸ்ரேல் சிறுவர்களையும், குழந்தைகளையும் இரக்கமின்றி கொலைசெய்து வருகின்றது. 500க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கான தகுந்த சான்றுகள் தங்களிடம் இருகின்றன எனவும் காஸாவிலிருக்கும் ஐ.நா. உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

gaza

gaza
ஜூலை 31ம் திகதிவரை உள்ளடக்கம்

Published by

Leave a comment