ஜெரூஸலம்: இஸ்ரேலும் ஹமாஸூம் 72 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு சம்மதித்திருக்கின்றன. இவ் யுத்த நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை உள்ளுர் நேரப்படி காலை 8 மணியிலிருந்து ஆரம்பமாகிறது.
உலகளவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் எதிர்ப்புக்களும், வெளிநாட்டுத் தூதுவர்களை பல நாடுகள் மீளழைத்துக் கொண்டதும், ஹிஸ்புல்லாவை ஹமாஸ் கோரியதும் இந்த யுத்தநிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தமைக்கான பிரதான காரணிகளாக அமைகின்றன.
ஐ.நாவின் வேண்டுகோளின்படி இந்த யுத்தநிறுத்தத்திற்கு இருதரப்புக்களும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.
காஸாவில் பலியான உயிர்கள் 1700 ஐ எட்டும் நிலையில் காஸாவுக்கு அரபு வலய எந்தவொரு நாடும் குரல்கொடுக்க முன்வரவில்லை எனவும், இஸ்ரேலுக்கு எதிராகக் குரல்கொடுக்க முன்வரவில்லை எனவும் காஸா களத்திலிருக்கும் வெளிநாட்டு தொண்டார்வ நிறுவனங்கள் கவலை தெரிவித்திருக்கின்றன.
Published by

Leave a comment