இஸ்ரேல் ராணுவத்தின் 2வது லெஃப்டினண்ட் வீரரை சிறைப் பிடித்தது ஹமாஸ் – இஸ்ரேலின் தாக்குதலில் 40 பாலஸ்தீனியர்கள் ஷஹீத்!!

israel gaza– AF-90

காஸா: இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்துள்ளதால் இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்கும் முயற்சிகளில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் 2வது லெஃப்டினண்ட் ஹாதர் கோல்டின் எனும் 23 வயதுடைய இஸ்ரேல் இராணுவ வீரரையே ஹமாஸ் பிடித்துள்ளது.

மேலும் அமெரிக்கா, ஐ.நா. முயற்சியால் அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தமும் முறிந்து போனது. ஹமாஸ் நிலைகளைக் குறி வைத்து கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த அதிரடித் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் ஷஹீதாக்கப்பட்டு நிலத்தில் வீழ்ந்திருக்கின்றனர்.

israel gaza

Published by

Leave a comment