இஸ்ரேலுக்கு எதிராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி!

kattankudy (3)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பலஸ்தீன் காஸா நகரில் இஸ்ரவேலர்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவில்த்து விடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிராக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் 01-08-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள

காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இருந்து மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

இதில் அனைத்து சகோதரர்களையும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவிக்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

Published by

Leave a comment