ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹமாஸ் அழைப்பு

Hamas6[1]காஸா: இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் இணையும்படி பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் லெபனான் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘போராட்டத்தில் லெபனான் முன்னணியும் எம்முடன் இணையும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்’ என்று ஹமாஸ் அரசியல் பிரிவு துணைத்தலைவர் மூசா அபூ மர்சூக் ரஷ்ய செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

இதில் இஸ்ரேல் எல்லையான தெற்கு லெபனானில் இருந்து தாக்குதலை ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ்வை அவர் கோரியுள்ளார்.

Hamas6[1]
ஹமாஸ் இலட்சனை

‘லெபனான் எதிர்ப்பு போராட்டம் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை’ என்று கெய்ரோவில் இருக்கும் மர்சூக் குறிப்பிட்டார்.

முன்னதாக காசா எதிர்ப்பு போராட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் செய்யித் ஹசன் நஸ்ருல்லாஹ் தமது ஆதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hizbullah
ஹிஸ்புல்லாஹ் இலட்சனை

Published by

One response to “ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹமாஸ் அழைப்பு”

  1. Palastine will win.and built nation on the justice. In sha allah isREAL terrorist in the world.isreal will destroy one day. We will waitng on the day

Leave a comment