மக்கா: போலி பிரதிகளை உள்ளடக்கி குர்ஆன் வடிவில் விற்கப்பட்ட போலி குர்ஆன் பிரதிகளை உடனடியாகப் பறிமுதல் செய்யுமாறு மக்கா ஆளுநர் இளவரசர் மிஷால் பின் அப்துல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறார்.
இத்தகைய போலி குர்ஆன் பிரதிகள் ஜித்தாவில் உள்ள பிரபல மோல்-வர்த்தக தொகுதியில் விற்கப்பட்டிருப்பதாக மக்கா ஆளுநருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த உத்தரவை ஆளுனர் அப்துல்லாஹ் விடுத்திருக்கிறார்.
இத்தகைய குர்ஆன் பிரதிகளைப் பரிசீலணை செய்வதற்கும், கண்டுபிடிப்பதற்குமாக விசேட குழுவை அப்துல்லாஹ் களத்தில் இறக்கியிருக்கின்றார்.
மாவட்ட பொலிஸார், இஸ்லாமிய விவகார அமைச்சு, நன்கொடை நிதியங்கள், அழைப்பு, வழிகாட்டல் நிலையங்கள், வர்த்தக, தொழில் அமைச்சு மற்றும் கலாசார தகவல் அமைச்சு ஆகிய நிறுவனங்கள், அமைச்சு மற்றும் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இக்குழுவில் ஒன்றிணைந்து தேடுதல், பரிசோதித்தல் மற்றும் பறிமுதல் செய்தல் போன்ற நடடிவக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இத்தகைய போலி குர்ஆன் பிரதிகள் குறைந்த விலையில் குறித்த இடத்தில் அமைந்துள்ள ஓரு சில கடைகளில் ஏற்கனவே விற்கப்பட்டிருந்ததும் தற்பொழுது தெரியவந்திருக்கின்றது.
‘இவ்வாறான போலி குர்ஆன் பிரதிகள் எவ்வாறு இங்கு ஊடுறுவின’ என சவுதி பத்திரிகை நிறுவனம் தற்பொழுது கேள்வி எழுப்பியிருக்கின்றது.
(படத்தில் குர்ஆன், காப்பகப் படம்)
Published by
![quran11[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/quran111.jpg?w=150&h=97)
Leave a comment