அட்டாளைச்சேனை: அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப்பிரிவுகளிடையே வருடந்தோறும் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டி நிகழ்வுகளின் 2014 ம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட இறுதிப்போட்டி நிகழ்ச்சிகள் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் எதிர்வரும் 2014.08.01 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகும். இன் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச வீரர்கள், வீராங்கனைகளும் கலந்து கொள்ளவுள்ளனர்
இப்போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெறுபவர்கள் 40ஆவது மாகாணமட்டப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வர்.
இப்போட்டியின் இறுதி நாளான 2014.08.02 சனிக்கிழமை மாலை இறுதி நிகழ்வுகளும், பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது மைதான ஓழுங்குகள் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல் தாஜீத்தீன் தலைமையில் நடைபெற்றுவருகின்றது.
இவ் விளையாட்டு போட்டி கரையோர பிதேசத்தில் இரண்டாவது தடைவையாக நடைபெறுவதுடன், இம் மைதானத்தில் கடந்த 2012ம் ஆண்டு மாகாணமட்ட போட்டிகளும் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்ககது.
Published by

Leave a comment