வரலாற்று பதிவில் அழியா இடம் பெறும் புத்தளம் முஸ்லிம்கள்

puttalam– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

டோஹா: உணர்வுகளால் இணைந்து போன எமது புத்தளம் முஸ்லிம்கள் எவர்கள் அவர்களை பிரிக்க நினைத்தாலும் அல்லாஹ் அவர்களை ஒற்றுமைப்படுத்துவான்.தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்ற மொழியின் உயிரோட்டத்தை எமது புத்தளம் முஸ்லிம்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளனர்.

புனித நோன்பு எதை எமக்கு கற்றுத்தந்ததோ அதனை நிதர்சனமாக இன்றைய புத்தளம் நோன்பு பெருநாள் அமைந்துள்ளது.தினந்தோறும் முகப்பு நுால்கள், மற்றும் இணையத்தளங்கள் மூலம் நாம் பேசும் விடயங்களாக மாறியிருந்த காசா மீதான ஈவிரக்கமற்ற இஸ்ரேலிய ஆயுத தாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் இவ்வுலகைப் பிரிந்து இறையடியெய்திய எமது சகோதரர்களின் ஜனாஸாக்கல் அல்ல சஹீதுகளின் உருவங்கள் எத்தனை எத்தனை.

பச்சிளம் பாலகர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள்,இஸ்லாமிய சகோதரிகள், அல்லாவுக்காக வாழ்விடங்களை பாதுகாக்க அல்லாஹ் அக்பர் என்று முழங்கிக் கொண்டிருக்கையில் எம்மைவிட்டுப் பிரிந்த சகோதரர்கள், பெற்றோர்கள்.இரத்தம் தோய்ந்து, உடல் அங்கங்கள் சிதறிபோன உறவுகளின் காட்சிகள்,கபன் துணிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் சுஹதாக்கல்.இவைகள் எமது முஸ்லிம் சமூகத்திற்கு இந்த இறைமறுப்பாளர்கள் கொடுத்துவரும் அநியாயங்களின் பட்டியல்கள்.

இந்த கோர நிகழ்வுகள் ஈமானிய உள்ளத்தில் தைக்கவில்லையென்றால் அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையினை நாம் எல்லோரும் செய்ய வேண்டும்.புத்தளம்.அது வாழ்வாதற்கு வழி கொடுத்த மனிதத்துவத்தைக் கொண்ட மண்.அந்த மண்ணின் மகிமையினை முற்றத்து மல்லிகைகளுக்கு மனக்காத போதும் அதனது உண்மையான வடிவம் இன்று உலகில் வாழும் மக்களால் விரும்பப்படுகின்றது.

உலகில் முஸ்லிம் உம்மத்துக்கு அநியாயமா ? அல்லது இலங்கையில் முஸ்லிம்களுக்கு அடிமைத்தனமா ? எது நடந்தாலும் அதற்கு எதிராக தம்மை பேசும் பொருளாக ஆக்கும் ஈமானை சுமந்த உள்ளங்களின் சங்கமம் என்றால் அது மிகையாகாது.(அல்ஹம்துலில்லாஹ்).

இன்றைய நோன்பு பெருநாள் எம்மல் எதை கொண்டுவரவேண்டும் என்பது தான் எமது பார்வையாக இருக்க வேண்டும்.காலத்தின் தேவைகள்இநடப்புகள் என்பவைகளை அறியாமல் கண்மூடித்தனமான வாய் வார்த்தைகள்,ஆக்க பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைக்காது மாறாக இஸ்லாத்தின் எதிரிகள் எதனை எதிர் பார்தது நிற்கின்றார்களோ,அந்த பிரிவினையினையே ஏற்படுத்தும் அதற்கான அடித்தளங்கள் இடப்படுகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எமக்கிடையில் விட்டுக் கொடுப்புகள் இல்லை என்றால் அது எம்மை அழிவுக்கு தான் அழைத்து செல்லும்(அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக).

நாம் பிறந்தது முதல் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது வாழ்வில் எத்தனையோ இன்பங்கள்இஅதே போன்று துன்பங்கள் ஏற்படுகின்றன.அப்போது நாம் எமது வெளிப்பாட்டினை காட்டுகின்றோம்.ஒரு முஸ்லிமை பொருத்த வரையில் அவன் வெறும் சுயநல போக்குடையவனாக இருக்க முடியாது.மாறாக வாழ்வில் சகல நிலைகளிலும் அவனது சிந்தனைஇசெயற்பாடு பொது வாழ்வில் பிரதிபலித்துக் கொண்டிருக்க வேண்டும்.இது தான் யதார்த்தமாகும்.

இதனை புரிந்து கொள்வதற்கு பாடசாலைக்கு சென்று கல்வி கற்க வேண்டிய தேவையில்லை.உள்ளார்ந்த உணர்வுகள் அந்த பாடத்தை ஏன் எம்மில் எற்படுத்தவில்லை.இதனை தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.இது எமது புத்தளத்து மக்களுக்கு மட்டும் என்று எவரும் கருதி விட வேண்டாம்.ஈமானிய உள்ளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கும்இது ஒலிக்க வேண்டும்.

இன்றைய புத்தளம் பெருநாள் கொத்துபாவும், அதன் பின்னரான காசா தொடர்பான விழிப்புணர்வும் ஒரு செய்தியினை உலகுக்கும்,முஸ்லிம் விரோத போக்குகளுக்கும் சொல்லியிருக்கின்றது.அது எமது உறவுகளுக்கு எங்கு அநியாயம் இழைக்கப்பட்டாலும் அந்த உறவுகளின் அங்கமாக எமது செயற்பாடு அமையும் என்பதை சொல்லியுள்ளது.நாமும் மரணிப்போம் அந்த கபனுடையின் மீது இரத்தம் தோய்கின்றது.அந்த உணர்வை இன்று புத்தளம் முஸ்லிம்கள் சுமந்து மரணப்பரீட்சையினை செய்துள்ளார்கள்.கபுறரையின் பிரகாசத்தை துஆக்கள் மூலம் கோறியுள்ளார்கள்.

யா அல்லாஹ் எம்மை உனது நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளவாயாக !

Published by

Leave a comment