மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தி

batticloamuslimmedia bdmm– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இஸ்லாத்தின் முகமனை சாந்தி சமாதானம் உன்டாவதாக இந் நன்நாளில் உலக நாடுகளில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடனும்,ஒற்றுமையாக வாழ வேண்டுமெனவும் இறைவனைப்பிராத்தித்து கொள்கின்றோம்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரிடம் அன்பாக வேன்டிக்கொள்வது ரமழானில் நாம் கடைபிடித்தது போன்று ஏனைய சமயத்தவர்களிடம் சிநோக பூர்வமான உறவுமுறைகளுடனும்,ஒற்றுமையாகவும்,இன ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இஸ்லாம் உணர்வுகளை மதிக்கும் உன்னத மார்க்கமாகும் அந்த வகையில் மனித வாழ்கையில் ஒவ்வொறு செயற்பாடுகளுக்கும் இஸ்லாம் நன்மை என கூறுகின்றது அது போலவே இப் பெருநாளும் நன்மை பயக்கும் என்ற அடிப்படையில் அநாவசியமான விடயங்களில் கவனத்தை செலுத்தாமல் காஸாவில் வதைபடும் எமது உறவுகளுக்காகப் பிராத்தனைகளில் ஈடுபடுவதுடன் எமது நாட்டின் அமைதிக்காவும் சமாதானத்திற்காகவும் பிராத்தித்திக்குமாறு அன்பாய் வேன்டிக்கொள்கிறது.

இந்நாள் அனைத்துலக மக்களுக்கும் இனிய நாளாக அமைய வேன்டும்மென மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் இறைவனை பிரார்தித்து தமது பெரு நாள் நல் வாழ்த்துக்களை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கின்றது.

Published by

Leave a comment